6,000 கைதிகள் விடுவிப்பு! மியன்மார் இராணுவம் அதிரடி அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
முன்னாள் பிரித்தானிய தூதர், ஜப்பானிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் அவுஸ்திரேலிய ஆலோசகர் உட்பட 6,000 கைதிகளை விடுவிக்கவுள்ளதாக மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.
மியன்மார் தேசிய தினத்தை குறிக்கும் வகையில் இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.
ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 16,000க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் கைது செய்துள்ளது. இந்நிலையில், 6000 கைதிகளை விடுவிக்கவுள்ளதாக மியான்மர் இராணுவம் அறிவித்துள்ளது.
முன்னாள் இராஜதந்திரி விக்கி போமன் மற்றும் டோரு குபோடா ஆகியோர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே நேரத்தில் 2021ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சீன் டர்னெல் தடுத்து வைக்கப்பட்டனர். போமன் 2002ஆம் மற்றும் 2006ஆம் ஆண்டுக்கு இடையில் மியன்மாருக்கான பிரித்தானியாவின் தூதராக பணியாற்றியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri