ஆளுநரின் போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிப்பில் யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள்(Photos)

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan Dec 22, 2022 03:06 PM GMT
Report

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதன்படி இன்று வியாழக்கிழமை (22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வண்டியுடன்மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆளுநரின் கண்காணிப்பில்...!

ஆளுநரின் போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிப்பில் யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள்(Photos) | Myanmar Refugee Transport Arrangements

பங்களாதேஷில் இருந்து இந்தோனேசியா நோக்கி செல்ல தயாராக இருந்த நிலையில் படகு பழுதடைந்து தத்தளித்த நிலையில் வெற்றிலை கேணி கடற்பரப்பை அன்மித்த கடற் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் படகு ஓட்டி உற்பட சுமார் 105 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த அகதிகள் மியன்மாரில் இருந்து சென்று பங்களாதேசில் தங்கி இருந்த முஸ்லிம்கள் என அறியக் கிடைக்கும் நிலையில் இந்தோனேசியா நோக்கி கடல் வழியாக செல்ல தயாராக இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களுக்கு காங்கேசன்துறை துறைமுகத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான உணவு மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி

ஆளுநரின் போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிப்பில் யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள்(Photos) | Myanmar Refugee Transport Arrangements

அதில் இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸார் கடந்த திங்கட்கிழமை இரவு உரிய ஏற்பாடுகள் இன்றி இரு பேருந்துகளில் அகதிகளை நீர் கொழும்புக்கு அனுப்பி வைக்க தயாராக இருந்த நிலையில் உயர் மட்டத் தலையீட்டால் யாழ்.சிறைச்சாலையில் அவர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19ம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

ஆளுநரின் போக்குவரத்து ஏற்பாடுகள் கண்காணிப்பில் யாழிலிருந்து புறப்பட்ட மியான்மார் அகதிகள்(Photos) | Myanmar Refugee Transport Arrangements

அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார். 

இவ்வாறான நிலையில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயவின் நேரடி கண்காணிப்பில் வட மாகாண அமைச்சுகளின் மூன்று பேருந்துகள் மூலம் குறித்த அகதிகள் இட நெருக்கடி இன்றி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பவுள்ளனர்.

அத்துடன் அவர்களுக்கு ஏதேனும் மருத்துவ ரீதியிலான பிரச்சினைகள் ஏற்பட்டால் உதவி வழங்குவதற்காக ஒரு ஆம்புலன்ஸ் வண்டியும் கூடவே பயணிக்கவுள்ளது.

மேலதிக செய்தி-தீபன்

35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US