மியன்மார் உள்நாட்டுப் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பும் சம்மதம்
மியன்மாரில் தொடர்ந்து நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர, அங்குள்ள இராணுவத் தரப்பும் கிளர்ச்சியாளர் குழுக்களும் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தாய்லாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் சிஹாசக் புவாங்கேட்கியோ தெரிவித்துள்ளார்.
இந்த மோதலுக்கு இராணுவ ரீதியாக எந்தத் தீர்வும் காண முடியாது என்பதை இரு தரப்பினருமே ஒப்புக்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சிக்குப் பிறகு, அங்கு ஏற்பட்டுள்ள வன்முறைகளில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர், இலட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், தேக்கமடைந்துள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளையும், அதற்கான இடத்தையும் வழங்கத் தயாராக இருப்பதாகத் தாய்லாந்து அறிவித்துள்ளது.

இது மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆசியான் கூட்டமைப்பு எடுத்து வரும் முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதரான பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சர் மரியா தெரசா லாசரோ மற்றும் தாய்லாந்து அதிகாரிகள், மியன்மார் இராணுவ ஆதரவு பெற்ற தேசிய ஒற்றுமை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.