கஞ்சா தொடர்பிலான தமது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் டயனா கமகே
திரிபுபடுத்தப்பட்டுள்ள கருத்து
கஞ்சா செய்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் நாங்கள் கூறுவதனை செய்தியாக போடுவதில்லை, ஏதாவது ஓர் துண்டை மட்டும் போடுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர்.
கஞ்சா ஏற்றுமதி
கஞ்சா என்பது எமது வரலாற்றுடன் பிணைந்த ஒன்று. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே நாம் கஞ்சாவை பயிரிட வேண்டும்.
கஞ்சா என்பது ஒரு மருந்து. அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.
கிணற்றுத் தவளைகளைப் போன்றவர்களே எமக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
