குற்றப் புலனாய்வு திணைக்களம் மீது பாரதூர குற்றச்சாட்டு சுமத்தும் கம்மன்பில
தாம் எழுதிய நூலை பிரசூரமாவதற்கு முன்னர் களவாடி, போலி தகவல்களை உள்ளடக்கி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெலஉறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் அதன் பிரதானி ஷானி அபேசேகர ஆகியோர் மீது தாம் இது குறித்து குற்றம் சுமத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை தேடிப் போதல் என்ற தலைப்பில் தாம் கடந்த மாதம் 31ம் திகதி நூல் ஒன்ற பிரசூரித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்று வந்த நிலையில் தமது நூல் எனக் கூறபப்டும் போலி நூல் ஒன்று திரிபுபடுத்தப்பட்ட தகவல்களுடன் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இது போலியான மற்றும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை கொண்ட புத்தகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நூலை தாம் எழுதிய போது, இறுதி நூல் வடிவம் பிரசூரமாவதற்கு முன்னதாக தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே, பாதுகாப்பு ஆய்வாளர் ரோஹான் குணரட்ன மற்றும் பதிப்பாளர்களான சரசவி நிறுவனம் ஆகிய தரப்புகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு குறித்த தகவல்களை சரி பார்த்துக் கொள்ளும் நோக்கில் சலாவிடமும், அணிந்துரை எழுதிக் கொள்ள ரொஹான் குணரட்னவிடமும் பதிப்பிற்காக சரசவி நிறுவனத்திற்கும் வழங்கியதாத் தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று பிரதிகளில் சுரேஷ் சாலேவிடம் வழங்கிய நூலின் உள்ளடக்கங்களின் அடிப்படையில் இந்த போலி புத்தகம் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சாலேவை கைது செய்த போது முழுமை பெறாத தமது நூலை குற்றப் புலனாய்வு பிரிவினர் கையகப்படுத்தியுளள்தாக சாலே தம்மிடம் மறைமுகமாக கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
தனது நூல் என்ற அடிப்படையில் போலி நூல் ஒன்றை சமூக ஊடகத்தில் பிரசூரிப்பது தண்டனைக்குரிய குற்றம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தாம் முறைப்பாடு செய்யப் போவதில்லை எனவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராக அவர்களிமே முறைப்பாடு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்த போலி நூலை யார் வாட்ஸ்அப் ஊடாக பகிர்ந்தார்கள் என்பதை கண்டறிய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.