எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை பின்னுக்குத் தள்ளிய பியுமி ஹன்சமாலி தொடர்பான செய்தி
உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான economist.com, எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் (MV X-press pearl) கப்பல் மூலம் இலங்கைக்கு ஏற்பட்ட சேதங்களை, இரண்டாம் இடத்திற்குத் தள்ளிய இலங்கை நடிகை தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய அதே காலப்பகுதியில் 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி மற்றும் அழகு கலை நிபுணர் சந்திமல் ஜெயசிங்க உள்ளிட்ட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டமையினால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தையடுத்து கூகுள் தேடு பொறி உட்பட சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடப்பட்ட ஒருவராக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டுள்ளதாக economist.com இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் இலங்கையின் கடற்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இலங்கையர்கள் உட்பட அமைப்புகள் பலவற்றின் கருத்துகளை பியுமி ஹன்சமாலியின் கைது மூடி மறைத்துள்ளதாக economist செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
