தாய்லாந்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறது முத்துராஜா யானை (Video)
தாய்லாந்து அரசாங்கத்தினால் 22 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட "முத்து ராஜா" யானையை மீண்டும் தாய்லாந்துக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய யானையை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து அழைத்துச் சென்ற விசேட வாகனம் இன்று (02.07.2023) அதிகாலை 03:00 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.
யானை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான சிறப்பு கூண்டு தயாரிக்கப்பட்டதோடு, தாய்லாந்துக்கு அழைத்து செல்ல ரஷ்ய "இல்லூஷன்-76" என்ற விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விமானம் இன்று காலை 07.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள "Xianmai" விமான நிலையத்திற்கு புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


