மூதூர் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்
திருகோணமலை (Trincomalee) - மூதூர் பிரதேச செயலகத்தில் நேற்று (17.01.2025) பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருன் ஹேமச்சந்திரவின் தலைமையில் இக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முக்கிய விடயங்கள்
இக்கூட்டத்தில், மூதூர் பிரதேசத்தின் கடந்தகால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால நிலையான அபிவிருத்தி திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது ஆகியன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், பொது அமைப்புக்கள், அரச நிறுவனங்கள், பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சண்முகம் குகதாசன், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |