முத்தையன்கட்டு இராணுவத்திற்கு எதிராக முடங்குமா வெள்ளிக்கிழமை! - தப்பினார் பிரிக்கேடியர் லலித் ஹேவா
இலங்கை தமிழரசுக் கட்சியினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(15) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து தமிழ் இளைஞர்கள், கடந்த 8ம் திகதி முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டு பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்ற நிலையில் தப்பி சென்றவர்களில் ஒருவரான, கபில் ராஜ், 9ம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கபட்டார்.
தப்பி சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் குறித்த அநீதிக்கு நீதி கோரியே கடையடைப்பு தமிழரசுக் கட்சியினால் இடம்பெறவுள்ளது.
இது இவ்வாறிருக்க முன்னதாக 2010ஆம் ஆண்டு செம்மணி விவகாரத்துடன் தொடர்புடைய பிரிக்கேடியர் லலித் ஹேவாவிற்கு ஆதரவாக இந்த தமிழரசுக் கட்சியின் சுமந்திரனே ஆதரவு தெரிவித்திருந்திருந்தார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



