கனடா தமிழ் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் - யாழ். முதல்வர் நேரில் வேண்டுகோள்
தமிழ் மக்களுக்காக கனடா அரசு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் (Vishwalingam Manivannan) கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மகனை யாழ். மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் யுத்தத்தினால் நீண்டகால பாதிப்புகளை உணர்ந்த நிலையில் அவர்களின் எதிர்காலத்துக் கட்டியெழுப்புவதற்கான உதவிகளை கனடா தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தொடர்பான விசாரணைகளுக்கும் கனடா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும்.
கனடா நாட்டின் ரொறண்டோ மாநகர சபைக்கும் யாழ். மாநகர சபைக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்ட நிலையில் அதன் செயற்பாடுகள் பாரியளவில் நடைபெறவில்லை .
ஆகவே கனடா அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் செயற்படும் நிலையில் தொடர்ச்சியாக தமிழ் மக்களுக்காக கனடா அரசாங்கம் தமது பங்களிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இச்சந்திப்பில் யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர ஆணையாளர் இ.ஜேசீலன் (E. Jazeelan) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.







தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 25 நிமிடங்கள் முன்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
