புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு : முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம்

Anura Kumara Dissanayaka Mujibur Rahman NPP Government
By Rakesh Jul 30, 2026 04:52 AM GMT
Report

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான நியமனங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசின் முக்கிய பதவிகளுக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஓரங்கட்டப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

வைத்தியசாலையில் பதற்றத்தை ஏற்படுத்திய பாடகர்.. பொலிஸ் அதிகாரி மீது கடும் தாக்குதல்

அரசமைப்புப் பேரவையினால் தெரிவு

மேலும் தெரிவிக்கையில், "புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கான மூன்று உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையினால் கடந்த 24 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டு பெயரிடப்பட்டுள்ளனர்.

எனினும், இதில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் சமன்சிறி ரத்நாயக்க, எம்.பி. ரோஹன புஷ்பகுமார மற்றும் கே. தவலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு : முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம் | Muslim Representation Ignored Boundary Commission

இக்குழுவில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இருவரும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த யாரும் இதில் உள்வாங்கப்படவில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூன்று பிரதான இனங்கள் வாழும் இந்நாட்டில், இத்தகைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்குச் சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்த ஓர் உறுப்பினரை நியமித்திருக்க வேண்டும். அதுவே முறையானதாகும்.

குறிப்பாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது எல்லை நிர்ணயம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

செயலாளர்கள் நியமனத்தின் போதும்

சில பிரதேச எல்லைகளில் இருந்து பல உறுப்பினர்கள் தெரிவாகும் நிலை காணப்படுகின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களில், தான் சார்ந்த சமூகத்தின் பிரதிநிதித்துவம் தொடர்பில் எடுத்துரைப்பதற்கு அந்தச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆணைக்குழுவில் இருப்பது கட்டாயமாகும்.

எனவே, எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் ஏற்பட்டுள்ள இந்தக் குறையை அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும். அத்துடன், தற்போதைய அரசில் முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களின் போதும் முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.

புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் புறக்கணிப்பு : முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம் | Muslim Representation Ignored Boundary Commission

அரசின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பில் பலரும் சுட்டிக்காட்டிய போதிலும், அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை. 

இதேபோன்று, அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் போதும் முஸ்லிம்கள் யாரும் ஆரம்பத்தில் நியமிக்கப்படவில்லை. பின்னர் அது குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த பின்னரே, முஸ்லிம் ஒருவர் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தற்போதைய அரசிடம் போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எந்தவொரு அரசிலும் முஸ்லிம்கள் இவ்வாறாகப் புறக்கணிக்கப்பட்டதில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

தீவிரமடையும் எல்நினோ தாக்கம் - இலங்கையர்களுக்கு சுகாதாரப்பிரிவு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

என்னை சிறையில் அடைப்பது சுலபமானதல்ல! வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டங்கள்: சவால் விடும் நாமல்

என்னை சிறையில் அடைப்பது சுலபமானதல்ல! வகுக்கப்பட்டுள்ள அரசியல் திட்டங்கள்: சவால் விடும் நாமல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US