கஜேந்திரகுமாருக்கு யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம் ஆதரவு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று(23.04.2025) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸுடன் யாழ். முஸ்லிம் மக்களுக்கு நெருங்கிய தொடர்பும் நட்பும் இருந்து வருகின்றது.

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா
தமிழ்த் தேசியப் பேரவை
அதுமட்டுமல்லாது கொள்கையில் தடுமாறா நிலையுடன் பயணிக்கும் கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி எமது மக்களின் நலன்களில் அதிக அக்கறையுடன் பயணித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில், காலத்தின் சூழ்நிலைக்கேற்ப கொள்கையுடன் தமிழ்த் தேசியப் பேரவை இருக்கின்றது. அதனடிப்படையில் இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எமது அமைப்பின் ஆதரவை தமிழ்த் தேசியப் பேரவைக்கு வழங்குவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
எனவே, முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ்த் தேசியப் பேரவைக்கு ஆதரவை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri
