முஸ்லிம் மக்களின் இன நல்லிணக்கம் - நெகிழ்ச்சியில் தென்னிலங்கை சிங்கள மக்கள்
கேகாலையில் முஸ்லிம் மக்கள் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
காலஞ்சென்ற கனேகந்த ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் பரதெனியே சந்தரதன தேரரின் இறுதி சடங்கு முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கன்னத்தோட்டையில் வாழும் முஸ்லிம் மக்களுடன் மிகவும் கண்ணியமான முறையில் வாழ்ந்த தேரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேரருக்கு அஞ்சலி
அந்தப் பகுதியிலுள்ள தமது வர்த்தக நிலையங்களை மூடி, தேரருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுலைமானியா மைதானத்தில் இறுதிக்கிரியைகள் நேற்று நடைபெற்ற நிலையில், தேரரின் சடலத்தை முஸ்லிம் மக்கள் சுமந்து சென்றுள்ளனர்.
சமூகங்களுக்கிடையில் பிணைப்பைக் கட்டியெழுப்பும் வகையில் அறநெறியில் ஈடுபட்ட தேரர் தனது 69ஆவது வயதில் கடந்த நான்காம் திகதி காலமானார்.
சிங்கள இனத்தை சேர்ந்த தேரருக்கு முஸ்ஸிம் மக்களால் வழங்கப்பட்ட நல்லிணக்கம் தொடர்பில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri