அர்ச்சுனா எம்பியின் கருத்திற்கு எதிராக சபையில் கொந்தளிந்த எம்பிக்கள்
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின்(Ramanadhan Archchuna) கருத்திற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் முஸ்லிம் மக்களிடையில் பிளவு
இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகையில்,
“முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பாக காலத்திற்கு காலம் பேசப்பட்டு வருகின்றன. அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால் அதுதொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள், உலமாக்கள் அரசாங்க தரப்பினர் அதனை கலந்துரையாடி மேற்கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லாமல் முஸ்லிம் சமூகத்தை தூண்டும் வகையில் அது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு இடமளிக்க கூடாது.
இது தமிழ் ,முஸ்லிம் மக்களிடையில் பிளவை ஏற்படுத்தக்கூடும். ஒரு சமூகத்தின் மார்க்க விடயங்கள் தொடர்பில் இந்த சபையில் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவர் தனது பைத்தியத்தை போக்க நல்ல வைத்தியத்தை பெற வேண்டும். அவரை சபாநாயகர் புத்தி சொல்லி வழிநடத்த வேண்டும். அவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும்”என்றார்.
இஸ்லாம் மார்க்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மத் சாலி நளீம் (Muhammad Salih Naleem) உரையாற்றுகையில்,
எமது மார்க்க விடயங்களில் அர்ச்சுனா எம்பி மூக்கை நுழைக்க கூடாது.
எமது மார்க்கத்தில் முஸ்லிம் பெண்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் எங்களுக்கு தெரியும்.
எமது மார்க்கத்தில் பெண் எப்படி நடத்தப்பட வேண்டும் பெண்களுக்கான சட்டம் என்றால் என்ன ,விவாக சட்டம் என்றால் என்ன விவாகரத்து சட்டம் என்றால் என்ன என அனைத்து சட்டங்களும் தெளிவான முறையில் வகுத்த மார்க்கம்தான் இஸ்லாம் மார்க்கம்.
அவர் சமூக வலைத்தளங்களில் தான் பெயர் ,புகழ் பெற வேண்டும் என்பதற்காக எமது மார்க்கத்தை கொச்சைப்படுத்தி பேசுகின்ற நிலையை நாம் காண்கின்றோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவருவதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு! அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை News Lankasri

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ Cineulagam
