கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்: சீருடை அனைவருக்கும் பொதுவானது என பா.அரியநேத்திரன் அதிரடி
சீருடை என்பது பொதுவான ஒரு உடை அது ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்றவிதமாக மாற்றமுடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலை சீருடை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
சீருடை விவகாரம்
பாடசாலை, வைத்தியசாலை, அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுவாக ஒரு சீருடையை தயாரித்தால் அதனை அனுசரித்து ஏற்றுக்கொள்ளவேண்டியது அனைவரினதும் கடமை.

ஒவ்வொரு மதத்தவர்களும் அவர்கள் விரும்பியபடி ஆடை அணிதல் என்றால் சீருடை என்ற ஒன்று அவசியமில்லை.
புதிய சுகாதார உதவியாளர்களுக்கு கொழும்பில் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கிய வேளை இந்த சீருடை தொடர்பாக தெளிவாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே இது வேண்டுமென்று கல்முனை ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வெளியில் ஒரு குழுவினர் சதித்திட்டம் தீட்டி சமூக ஊடகங்களில் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.
சட்டம் நீதி தன் கடமையை செய்யும். யாரும் அஞ்ச வேண்டியதில்லை. உண்மை வெவ்லும் என குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri