அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்கும் முஸ்லிம் நாடுகள்
கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்பதாக முஸ்லிம் நாடுகள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான், துருக்கி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறி டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹாடியர், கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பது என அரசாங்கம் எடுத்த தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என துருக்கி வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹாமி அசோகீ தெரிவித்துள்ளார்.
கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் எதிர்பார்த்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் 19 வைரஸால் மரணமானவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
கோவிட் 19 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் முடிவை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
கோவிட் 19 இனால் உயிரிழப்போரின் உடலங்கள், சுகாதார சேவைகளின் பணிப்பாளரின் கட்டளைகளுக்கு இணங்க அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யப்படும் என்று வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
