ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பேண்தகு கௌரவமான சமாதானம் நிலை நாட்டப்படுவதற்கு அனைத்து தரப்பினரும் முனைப்பு காட்ட வேண்டுமென கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தான் முரண்பாடுகளில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் வன்முறைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் சூழ்நிலைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசியல் வன்முறைகள் காரணமாக பாரியளவில் உயிர்ச் சேதங்களை சந்தித்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களை நிபந்தனையற்ற ரீதியில் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.
நம்பிக்கையை கட்டியெழுப்பக் கூடிய வகையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் சமாதான முனைப்புக்களை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
