எரிபொருள் வரிசைகளில் நிற்பவர்களுக்காக இசை நிகழ்ச்சி
எரிபொருள் இல்லாத காரணத்தினால்,நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் மக்களின் சோர்வு மற்றும் மனநலன் கருதி அனுராதபுரம் கெக்கிராவ நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எதிரில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மனநலன் சுகாதாரம்
கெக்கிராவ நகர இசைக்குழு ஒன்று பல நாட்களாக வரிசைகளில் நிற்கும் மக்களின் மனநல சுகாதாரத்தை கவனத்தில் கொண்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது வரிசைகளில் நின்றிருந்த மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்று ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் கிடைக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசைகளில் காத்திருந்திக்கின்றனர்.
இவ்வாறு வரிசையில் நிற்பவர்களுக்கு உளநலம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அத்துடன் வரிசைகளில் காத்திருந்தவர்களில் சுமார் 13 பேர் கடந்த காலத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.