முனைத்தீவிலிருந்து முத்தாய் மின்னும் சாதனைப் பெண்
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” என்றான் பாரதி, ஆனால் தற்போதைய நிலையில் ஒவ்வொரு விடியலிலும் எங்கு பார்த்தாலும் பெண்கள் துன்புறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும், படித்த பெண்பிள்ளைகள் தொழில்வாய்ப்பின்றியும் காணப்பவதாகவே நாம் தினமும் அறிகின்றோம்.
மாறாக பெண்ணாய் பிறந்து இவ்வுலகில் சாதித்து”சாதனைப் பெண்களாக” திகழவேண்டும் எனவும் ஆங்காங்கே ஒருசில பெண்கள் மின்னுவதையும் நாம் காணமுடிகின்றது. அவ்வாறு மின்னும் ஒரு பெண் தாரகையின் கதையையே இவ்வருட மகளிர் தினத்தையொட்டி வெளிக் கொண்டு வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கர் பிரதேசம் என்பது கடந்த யுத்த காலத்தில் எதிர்கொண்ட அவலங்களை யாவரும் நன்கு அறிவார்கள். பலதடவைகள் இடம்பெயர்ந்து இறுதியாக 2007.05.22 மீளக்குடியமர்ந்து தற்போது அப்பகுதியிலுள்ள மக்கள் விவசாயம், கால்நடைவளர்ப்பு, கடற்றொழில் என தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சுயதொழில்
ஆங்காங்கே அவ்வப்போத சிற்சில அபிவிருத்திகள் நடைபெற்றாலும் இன்னுமின்னும் அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்லக்கூடிய விடயங்கள் ஏராளம் உள்ளன. இவ்வாறான நிலையில் அங்குள்ள இளைஞர் யுவதிகளும் தமது முயற்சிக்கு எற்றவாறு கற்றலிலும் மிளிர்வதோ, பலர் கற்று விட்டு தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இக்காலகட்டத்தில் கற்றவற்றைக் கொண்டு சுயதொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பிற்குட்பட்ட போரதீவுப்பற்று பிரதேசத்திற்குபட்பட்ட முனைத்தீவு கிராமத்தில் வசித்து வருகின்றார் மகாலிங்கம் மனோதினி. மனோதினியின் முயற்சி என்பது எவ்வாறு அமைகின்றது என்பது தொடர்பில் நாம் அறிய முற்பட்டடோம். நான் தற்போது பி.எஸ்.சி பிளாண்டேசன் மேனேஜ் மேன்ட் படித்துக் கொண்டிருக்கின்றேன்.
ஏற்கனவே நான் விவசாயத் துறையிலே குண்டகசாலையிலே டிப்ளோமா பட்டத்தை பெற்றிருக்கின்றேன். நான் எனது விவசாயத் துறையில் டிப்ளோமா பட்டத்தை முடித்துவிட்டு வேலையின்றி இருக்கக்கூடாது என்ற எனது சிந்தனைக்கு டிப்ளோமா பட்டத்தை முடித்த கையோடு எனது உயர் படிப்பையும் நான் தொடர்கின்றேன்.
அதற்கு மேலாக வீட்டிலே வீணாகப் பொழுதைக் கழிக்காமல் நான் தற்போது “உயிர்ப்பு” என்கின்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பகுதிநேரமாக கடமையாற்றுவதோடு, இன்னும் ஒரு மருத்துவ கிளினிக் நிலையத்திலும் நான் கடமையாற்றி வருகின்றேன். இவற்றிற்கு மேலாக நான் வீட்டிலேயே இருக்கும் நேரத்தை பிரயோசனமாக கழிக்க வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்து கொண்டு எனது வீட்டாரின் ஒத்துழைப்புடன் காளான் செய்கையில் ஈடுபட்டு வருகின்றேன்.
அது மாத்திரமின்றி இயற்கை முறையில் கிடைக்கின்ற கற்றாளை, புதினா, மஞ்சள், உள்ளிட்ட பல இயற்கை மூலிகை பொருட்களைக் கொண்டு சவர்க்காரம் தயாரித்த வருகின்றேன். இதற்கு மேலாக சத்துமா தயாரித்தல், மிளகாய்தூள், தயாரித்தல், கோப்பி, பொருட்களையும் உற்பத்திகளையும் செய்து வருகின்றேன். படித்துவிட்டு அரசு தொழில் தேடி அலைவதைவிட படித்தவற்றைக் கொண்டு நமது வருமானத்தை நாமாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கிணங்க நான் எனது சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றேன்.
நான் கடமையாற்றும் உயிர்ப்பு என்கின்ற தன்னார்வ தொண்டர் கல்வி, தற்சாக சார்பு பொருளாதாரம், கிராமிய பொருளாதாரத்தை கட்டி எழுப்புதல், உள்ளிட்ட பல விடயங்களுக்கு உதவி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களும் எனது இந்த தொழில் முயற்சிகளுக்கு பெரிது உதவி வருகின்றார்கள். நான் குண்டகசாலையில் விவசாயத்துறையில் டிப்ளோமா பட்டத்தை பெற்ற பின்னர் பல தொழில்களுக்கு விண்ணப்பித்தேன் எந்த தொழிலும் எனக்கு கிடைக்கவில்லை இந்த நிலையில்தான் ஏன் நான் வீட்டில் வீணாக பொழுதை கழிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது.
காலநிலை தேவை
அந்த வகையில் தான் நான் படித்தவற்றைக் கொண்டு இவ்வாறான சிறு சிறு தொழில் முயற்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் பெண்களும் முன்னேறலாம் என்ற விடயத்தை உலகுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. நான் ஒரு கிராமப்புறத்தில் இருந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை என்மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
என்னைப் போன்ற பல பெண் பிள்ளைகள் கிராமப் புறங்களில் படித்துவிட்டு வீட்டிலேயே வீணாகப் பொழுதை கழிக்கின்றார்கள். இவர்களுக்கெல்லாம் நான் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. வீட்டிலேயே இருந்து கொண்டு நான் காளான் செய்கைளை மேற்கொண்டு வருகின்றேன். காளானை நுகரும் மக்கள் கிராமப்புறங்களில் குறைவாகவே உள்ளார்கள் நகர்ப்புறங்களிலும், அரச தொழில் ஈடுபடுபவர்களும், காளானை நுகர்வதில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
காளானில் உயர்தரத்திலான புரோட்டின், மினரல்கள், விட்டமின்கள், நோய் எதிர்ப்புசக்தி, இவற்றுக்கு மேலாக புற்று நோயை அழிக்கக்கூடிய சக்தியும், இந்த காளானுக்கு இருக்கின்றது. காளான் செய்கையை கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து தான் நான் மேற்கொண்டு வருகின்றேன். இதுவரைக்கும் எனக்கு பாரிய வெற்றியாகதான் இந்த தொழில் அமைந்திருக்கின்றது.
இன்னும் எனது காளான் தொழிலை மேலும் விஸ்தரித்து நுகர்வோருக்கு வழங்கலாம் என நான் யோசிக்கிறேன். ஒரு கிலோ காளான் ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்து வருகின்றேன். காளானுக்கு குளிரான காலநிலைதேவை அதிகளவு அறுவடை செய்தால் குளிர்சாதன பெட்டியில் தான் அதனை வைத்திருக்க வேண்டும். அதிகளவு அறுவடை செய்யும் பட்சத்தில் விற்பனையும் குறைவடையும் நிலையில் எனக்கு ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இதுதொடர்பில் நான் விவசாயத் திணைக்களத்துக்கு அறிவித்திருக்கின்றேன்.
இந்நிலையில் எனக்கு அவர்கள் பதப்படுத்தக்கூடிய இயந்திரத்தை தருவதாக கூறியிருக்கின்றார்கள். பதப்படுத்தி வைக்கும் பட்சத்தில் அதிலிருந்து காளான் கோபி, காளான் பப்படம், உள்ளிட்ட பலவிதமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யலாம், அது மாத்திரம் இன்றி நான் மஞ்சள், வேப்பஇலை, குப்பைமேனி, கற்றாழை, சீமையாக்கத்தி, அக்ரீவ் கார்பன், போன்ற இயற்கை மூலிகைகளைக் கொண்டு சவர்க்காரங்களை தயாரித்து வருகின்றேன்.
இதற்குரிய பயிற்சியை நான் பகுதி நேரமாக கடமைப்படுகின்ற உயிர்ப்பு என்கின்ற நிறுவனம் தான் எனக்கு வழங்கியிருந்தது. இது பற்றிய விடயங்களை அவர்களிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன்.
வன்முறைகள்
எனினும் சர்வதேச ரீதியில் இதனை ஏற்றுமதி செய்வதற்காக வேண்டி பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. பரிசோதனைகளுக்காக நான் மாதிரிகளை அனுப்பி இருக்கின்றேன் அதற்குரிய உதவிகளையும் உயிர்ப்பு என்கின்ற அமைப்பு எனக்கு வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
சவர்க்காரம் தயாரிப்பதற்காக வேண்டி எனது வீட்டிலே ஒரு பகுதியில் கற்றாழைகளை, புதினா வளர்த்து வருகின்றேன். இவை அனைத்திற்கும் எனது வீட்டின் உள்ள அங்கத்தவர்கள் எனக்கு பெரிதும் உதவி வருகின்றார்கள் மேலும் சத்துமா, கோபி, குக்கண்மா, உளுந்துமா, அரிசிமா, உள்ளிட்ட தானியங்களையும் பதப்படுத்தி பொதிசெய்து விற்பனை செய்து வருகின்றேன்.
படித்துவிட்டு யாரோ தொழில் தருவார்கள் என்று எதிர்பார்ப்பு இருக்கின்ற இக்காலகட்டத்தில் படித்தவற்றைக் கொண்டு நாம் வாழ்க்கையில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற சிந்தனை எனக்குள் அடிக்கடி எழுந்த வண்ணமே இருக்கும். அந்த வகையில்தான் நான் குண்டகசாலையில் விவசாயத்துறையில் டிப்ளோமா கற்கை முடித்த கையோடு நான் பி.எஸ்.சி பிளான்டேஷன் மனேஜ்மேன்ட் பட்டப்படிப்பையும் படித்துக் கொண்டிருக்கின்றேன்.
சனி ஞாயிறு நாட்களில் எனது கல்விக்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டு இவ்வாறான பொருட்களை வீட்டில் இருந்தே செய்து கொண்டு உயர்ப்பு என்கின்ற நிறுவனத்திலும், ஒரு தனியார் மருத்துவ சிகிச்சை நிலையத்திலும் பகுதிநேரமாகவும் கடமையாற்றி வருகின்றேன். இவைகள் அனைத்தையும் நான் நேரம் முகாமைத்துவத்தின் அடிப்படையிலேயேதான் பங்கீடு செய்து மேற்கொண்டு வருகின்றேன்.
என்னைப் போலவேதான் பல பெண்கள் எமது பிரதேசத்தில் வாழ்கின்றார்கள். அவர்களும் தாங்கள் தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைதான் வேண்டும் என்கின்ற ஒரு எண்ணத்தில் இருந்தாலும் அது காலப்போக்கில் வரும். அதுவரைக்கும் வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் தங்களுக்குள்ளே இருக்கின்ற ஆளுமைகளை கொண்டு இவ்வாறான சுயதொழில்களில் ஈடுபட வேண்டும்.
வீணாக பொழுது கழிக்காமல் குடும்பத்தாருடன் ஒத்துழைப்புடனும் இதுவாறான தொழில்களின் ஈடுபடலாம். என்னுடைய தற்சார்பு பொருளாதாரத்தை நானாகவே முன்நின்று கட்டி எழுப்பி வருகின்றேன். என்னைப் போல பெண்களும் முன்வந்து இவ்வாறான சுய தொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டும். பல பெண்கள் குழந்தைகளை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு செல்கின்றார்கள்.
இதனால் பெண்கள் மீதான வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன, சிறுவர்கள் மீதான வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன, இந்த வகையில்தான் தாமாகவே முன்வந்து தொழில் முயற்சியிலே மேற்கொள்கின்றபோது ஏனைய பெண்களுக்கும் நாங்கள்தான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். என்ன போலவே பிரதேசத்தில் வாழ்கின்ற பெண்களும் சமுதாயத்தில் மிளிர வேண்டும் என்பதுதான் எனது ஆசையும்.
பட்டபடிப்பு
தொழில் வான்மை ரீதியாக கற்றுக் கொண்டு கிராமத்துப் பெண்களும் சாதிக்கலாம் என்பதை நிலை நாட்ட வேண்டும். இந்த நிலையில் தான் கிராம ரீதியாகவும் நாடு ரீதியாகவும் நாங்கள் முன்னேற்றம் அடையலாம் சுயதொழில் முயற்சியில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு நான் கற்ற விடயங்களை கற்றுக் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
எனது உயிர்ப்பு என்கின்ற அமைப்பும் அதற்குரிய உதவிகளை செய்வதற்கு தயாராகி இருக்கும். கிராமப்புறங்களில் இருக்கின்ற பெண்கள் இவ்வாறான சுய தொழில் நிகழ்ச்சிகள் ஈடுபடுவார்களாக இருந்தால் அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கின்றேன் “மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்தல் வேண்டும் அம்மா” என்கின்ற பாரதியாரின் கருத்துக்கு இணங்க இன்றைய மகளிர் தினத்தில் அனைத்துப் பெண்களுக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்னைப் போலவே இந்த நாட்டிலே வாழ்கின்ற பெண்கள் அந்த முன்மாதிரியாக பெண்களாக திகழ வேண்டும் என்பதை இன்றைய மகளிர் தினத்தில் அனைவரும் திட சங்கத்தும் பேண வேண்டும் என நான் அனைவரிடத்திலும் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் எமக்கு விளக்கினார்.
தந்தை விவசாயத் தொழில் செய்து வருகின்றார் அம்மா வீட்டில் நீ இருக்கின்றார். சிறிய வயதில் இருந்தே தந்தையைப் போல் விவசாயத் துறையில் கல்வி கற்க வேண்டும் என்பதே மனோதினியிள் ஆசை அந்த வகையில் தான் மனோதினி விவசாயத் துறையில் கொண்ட மேகத்தால் விவசாய துறை டிப்ளமா பட்டத்தை முடித்துக் கொண்டு தற்போது வயம்ப பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி பிளாண்டேசன் மனேஜ்மேன்ட் உயர் பட்டப் படிப்பினையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.
அவருடைய இரு சகோதரிகளும், ஒரு சதோரனும் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று வருகின்றார். இன்னிலையில் எமது பிரதேசத்திலிருந்து சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நாம் பல்வேறுவிதமான பயிற்சிகளையும், உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.
ஒரு சுயதொழில் குழுவினருக்கு தேங்காய் எண்ணை எடுக்கும் இயந்திரமும் பெற்றுக் கொடுத்துள்ளோம். அண்மையில் 25 பெண்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு, உணவு உற்பத்தி, ஆகிய பயிற்சிகளை வளங்கியுள்ளோம். மேலும் இப்பிரதேசத்தில் உணவு உற்பத்தி, உணவு பதணிடுதல், கணக்கு வைப்புமுறை, சுயதொழில் நிலையங்களைப் பதிவு செய்தல், போன்ற பல விடைங்கள் தொடர்பிலும் நாம் அவர்களுக்கு உதவி வருகின்றோம்.
இவற்றக்கு மேலாக எமதுதிணைக்களம் சார்பாக வரும் அனைத்து விதமான உதவித்திட்டங்களையும் நாம் மேற்கொண்டு வருவதோடு, அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டு இவ்வாறு சுயதொழில்களில் ஈடுபட்டுவரும் பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான உதவித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். எனினும் மக்கள் இன்னும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே இருக்கின்றர். என தெரிவிக்கின்றார் போரதீவுப் பற்றுப் பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஜீவராணி இராமகிருஸ்ணன்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முறைத்தீவு கிராமத்திலிருக்கும் மனோதினி இக்காலகட்டத்தில் ஓர் “சாதனைப் பெண்தான்” மனோதினி ஏனைய பெண்களுக்கும் ஓர் சிறந்த முன்னுதாரணமாகும். எனினும் இவ்வாறான கிராமத்தில் மின்னும் பெண்தாரகைகளுக்கு அரசாங்கமும், ஏனை பொது அமைப்புக்களும் அனைத்து உதவிளையுமு, ஆலோசனைகளையும் மேற்கொண்டு ஊக்கப்படுத்துமிடத்து எதிர்காலத்தில் கிராமங்கள் தீதியாக இன்னும் பல மனோதினிகளை உருவாக்கலாம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |