முறிகண்டி வளாக வர்த்தகர்கள் கோவிட் காலத்திலும் வருமான வரி அறவிடுவதாக குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சீரமைக்கப்படாத நிலையில் கோவிட் காலத்திலும் வருமானவரி அறவீடு செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்பொழுது கோவிட் பரவல் நிலை காணப்படும் சூழலில் மக்களின் வருகை மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலும் மாதாந்தம் 1000 ரூபா பிரதேச சபையால் அறவிடப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கச்சான் கடைகள் இன்று உக்கி விழும் அபாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் நிரந்தர கட்டட வசதிகளை ஏற்பாடு செய்து தருமாறு புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கேட்ட பொழுதும் இன்று வரை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடைகள் மூடப்பட்ட நிலையில் தமது வியாபார பொருட்களைப் பிராணிகள் அழித்து வருவதாகவும், பிரயாணிகள் வருகை தரும்போது கடைகளின் நிலை குறித்து கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, முன்னாள் போராளியான தனக்கு வாழ்வாதாரத்துக்காக இடம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும், தற்காலிக கடையைத் தானே அமைத்த நிலையில் இன்று அது சேதமடைந்துள்ளதாகவும் முன்னாள் போராளி தெரிவிக்கின்றார்.
இவ்வாறான நிலையிலும், கோவிட் பரவல் காலத்திலும் தம்மிடம் வருமான வரியாகக் குத்தகைப் பணம் பெறப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமது வர்த்தக செயற்பாடுகளிற்கு ஏற்ற வகையில் நிரந்தர கடைகளை அமைத்துத் தருமாறும், தற்கால சூழலில் வரி அறவீட்டை இடை நிறுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
