வெளிநாட்டில் வசிக்கும் இளம் தம்பதி! இலங்கையில் வசிக்கும் குடும்பத்தை கொலை செய்ய முயற்சி
கனேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹல்பத்தர பத்மே என்பவரின் மனைவியின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வந்த 2 நபர்களை உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெஹல்பத்தர பத்மேவும் அவரது மனைவியும் தற்போது வெளிநாட்டில் உள்ளனர், அதே நேரத்தில் மனைவியின் குடும்ப உறுப்பினர்கள் பன்னால பகுதியில் வசிக்கின்றனர்.
புலனாய்வுத் தகவல்
நேற்று முன்தினம் மதியம் வீட்டை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இரண்டு நபர்கள் குறித்து புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடனடியாக செயல்பட்ட பொலிஸார் இருவரையும் கைது செய்தனர். அந்த நேரத்தில் கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் தாய், தந்தை மற்றும் தம்பி வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றவாளி
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டுபாயில் வசிக்கு சமீர என்ற நபரால் சந்தேக நபர்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
