லண்டனில் இளம் ஆசிரியை கொடூரமாக கொலை! பிரித்தானிய அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
லண்டனில் இளம் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபயிற்சிக்கு சென்ற 28 வயதான சபீனா நெஸ்ஸா என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட 11 கொலைகாரர்கள்
இந்த வழக்கின் முதற்கட்டமாக 11 கொலைகாரர்கள் அல்பேனியாவுக்கு நாடுகடத்தப்பட உள்ளனர் என பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அல்பேனிய பிரதமர் எடி ராமா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதில் ஆசிரியர் சபீனா நெஸ்ஸா கொலை வழக்கில் 36 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள Koci Selamaj என்பவரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 2021 செப்டம்பர் மாதம் தென்கிழக்கு லண்டனில் ஆசிரியர் சபீனா நெஸ்ஸா கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது அந்த கொலைகாரன் உட்பட 11 அல்பேனியர்கள் நாடுகடத்தப்பட உள்ளனர். பிரித்தானியாவில் பல்வேறு சிறைகளில் 1,330 அல்பேனியர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெளிநாட்டு கைதிகளுக்காக செலவிடும் தொகையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளிநாட்டு சிறை கைதிகளுக்காக ஆண்டுக்கு 60 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |