லண்டனில் இளம் ஆசிரியை கொடூரமாக கொலை! - ஒருவர் கைது
லண்டனில் இளம் ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தென் கிழக்கு லண்டனில் Cator பூங்காவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியில் பணி முடித்துவிட்டு நடைபயிற்சிக்கு சென்ற சபீனா நெஸ்ஸா என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். 28 வயதான சபீனா நெஸ்ஸா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 18ம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. மறுநாள் காலையில் குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் 38 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேக நபர் லூவிஷாமில் உள்ள முகவரியில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் இரண்டாவதாக குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக 40 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் விரைவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri