நாட்டை உலுக்கிய ஆயிஷாவின் கொலை தொடர்பில் வெளியான பின்னணி
பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் 9 வயதான சிறுமி ஆயிஷா கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமி பாத்திமா ஆயிஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் நாளை (ஜூன் 1ம் திகதி) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இந்நிலையில், சிறுமியின் மரணம் தொடர்பில் தற்போது பல விடயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹமட் பாரூக் என்ற 29 வயதுடைய சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையான மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், கூலி வேலை செய்து அப்பகுதியில் வசிப்பதாகவும், அவரது மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
8, 5 மற்றும் 3 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், 9 வயது சிறுமி பாத்திமாவை அருகில் உள்ள கடையில் இருந்து கோழிக்கறி வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்து கொண்டிருந்த போதே கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம்
உயிரிழந்த சிறுமி சந்தேகநபரின் குழந்தையின் தோழி எனவும், சந்தேகநபரின் மாமா இறந்த சிறுமியின் தாயின் சகோதரியை திருமணம் செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி ஆயிஷா கோழியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே சந்தேகநபர் சதுப்பு நிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், சந்தேகநபரின் பிடியிலிருந்து சிறுமி தப்பிக்க முயன்ற போது சிறுமியின் வாயில் துணியை திணித்து, சில மீட்டர் தூரம் இழுத்து சென்று அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் தள்ளி, சிறுமியின் முதுகில் மண்டியிட்டு இறக்கும் வரை இருந்ததாகவும் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறுமி வீட்டிற்கு சென்று தாய் அல்லது தந்தையிடம் கூறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தேகம் அடைந்து சதுப்பு நிலத்தில் சிறுமியை தள்ளி கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
