இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார்

Colombo China Crime Port City Colombo
By Dhayani Aug 22, 2026 06:31 AM GMT
Report

கொழும்பு துறைமுக நகரில் தங்கியிருந்த மூன்று சீன நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களில் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட சீன நாட்டவரின் உடல், எஹெலியகோடாவின் கரந்தான பகுதியில் வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது  

இச்சம்பவம் குறித்து கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களின் புகைப்படங்களையும் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார் | Murder Of Chinese National 03 Suspects Arrested

வான் அல்லது கடல் வழி ஊடாக நாட்டைவிட்டுத்தப்பியோடக்கூடும்

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சீன நாட்டவர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, மேலதிகமாக மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர்.

இலங்கையில் தேடப்பட்டு வரும் சீனப்பிரஜைகள் - பொது மக்களிடம் அவசர உதவிக்கோரும் பொலிஸார் | Murder Of Chinese National 03 Suspects Arrested

குறித்த மூன்று சீன நாட்டவர்களும் தற்போது இலங்கையில் தங்கியிருப்பதுடன், சுற்றுலா விசாவில் வருகை தந்த இவர்களின் செல்லுபடியாகும் விசா காலம் முடிவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

எனவே மூன்று சீன நாட்டவர்களும் வான் அல்லது கடல் வழி ஊடாகச் சட்டவிரோதமான முறையில் நாட்டைவிட்டுத் தப்பியோடக்கூடும் என்பதால், அவர்களைக் கைது செய்யப் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

அதற்கமைய, குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருப்பின், பொறுப்பதிகாரி / கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு - 0718 591 735 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு  பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!

அவசரமாக டுபாயிக்கு பறந்த CCIB அதிகாரிகள் குழு! இலங்கைக்கு அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்..!

நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..

நாட்டைக் காப்பாற்ற யோஷிதவை பலிகடாவாக்கிய மகிந்த! புது புதுக் காரணம் கூறும் ராஜபக்ச தரப்பு..


GalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US