கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன்! ஒரு தாயத்தால் அம்பலமான உண்மைகள்..

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Shadhu Shanker Nov 04, 2026 01:39 PM GMT
Report

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வாகன திருத்துமிடமொன்றில் நடைபெற்ற மதுபான விருந்தின் முடிவில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

குறித்த இளைஞரைத் தாக்கிக் கொலை செய்த பின்னர், அவரது சடலத்தையும் மோட்டார் சைக்கிளையும் பூகொடை, பெபிலியவல பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்குக் கொண்டு சென்ற கொலையாளிகள், ஏழு டயர்களின் மீது வைத்து தீயிட்டு எரித்து அழிக்க முயற்சித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சம்பவம்

அத்துடன், எரிந்த நிலையில் எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளின் பாகங்களை களனி ஆற்றில் வீசி தடயங்களை அழிக்கவும் முயற்சித்துள்ளனர்.

எனினும், கொலைக்கான அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டதாகக் கருதிய சந்தேகநபர்களின் முயற்சிகள், உயிரிழந்த இளைஞரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சிறிய தாயத்து ஒன்றினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன்! ஒரு தாயத்தால் அம்பலமான உண்மைகள்.. | Murder Mystery Of The Young Man Who Set On Fire

இந்தக் கொடூரக் கொலையில் உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய, சேதவத்த வீதியைச் சேர்ந்த குலந்தை ஜேசு சேரன் என்ற 24 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் எரிக்கப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தாயத்து, தனது மகனின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த தாயத்து என்பதை அவரது தாயார் அடையாளம் காட்டியதையடுத்து, உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 48 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, கொலை மற்றும் சடலத்தை மறைத்தமை தொடர்பான பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பூகொடை மற்றும் அவிசாவளை நீதிமன்றங்களில் பொலிஸார் விடயங்களை அறிக்கையிட்டுள்ளனர்.

தீவிர சோதனை நடவடிக்கை

இதனையடுத்து, பூகொடை பதில் நீதவான் கமல் சுமித் குமாரவின் உத்தரவின் பேரில், பூகொடை பெபிலியவல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தீவிர சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வத்துபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆர்.ஏ.எஸ். ராஜபக்ச மற்றும் கம்பஹா மாவட்ட குற்றத்தடுப்பு ஆய்வக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து சுமார் ஐந்து மணிநேரம் இந்த இடத்தைப் பரிசோதித்துள்ளனர்.

கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன்! ஒரு தாயத்தால் அம்பலமான உண்மைகள்.. | Murder Mystery Of The Young Man Who Set On Fire

இதன்போது, இளைஞரின் சடலத்தை எரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏழு டயர்களின் கம்பிப் பகுதிகள், உயிரிழந்தவரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த தாயத்து, அவருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளின் சுவிட்ச் சாவி மற்றும் சில எலும்புத் துண்டுகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சடலத்தையும் மோட்டார் சைக்கிளையும் எரித்த பின்னர் எஞ்சிய எலும்புகள் மற்றும் மோட்டார் சைக்கிளின் பாகங்களை, கொஸ்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஸ்வத்த பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீசியதாக பிரதான சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, அவிசாவளை பதில் நீதவான் சம்பா சி. சந்திரதாசவின் உத்தரவின் பேரில் குறித்த பகுதியில் மற்றுமொரு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் சுழியோடிகள் சுமார் நான்கு மணிநேரம் களனி ஆற்றில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், ஆற்றில் வீசப்பட்டதாகக் கூறப்படும் எவ்விதமான பொருட்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டுப் பயணத் தடை

மறுபுறம், இளைஞர் காணாமல் போனதைத் தொடர்ந்து, மதுபான விருந்து நடைபெற்ற வாகன திருத்துமிடத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சிலர் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடைகளைப் பெற்ற பொலிஸார், அவர்களை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.

கொடூரமாக கொலை செய்து எரிக்கப்பட்ட தமிழ் இளைஞன்! ஒரு தாயத்தால் அம்பலமான உண்மைகள்.. | Murder Mystery Of The Young Man Who Set On Fire

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக பிரதான சந்தேகநபர்கள் இருவர் தங்களது தலைமுடியைக் குறுகியதாக வெட்டி தோற்றத்தை மாற்றியதுடன், தாங்கள் வெளிநாட்டில் இருப்பதாக மற்றவர்களை நம்ப வைப்பதற்காக ரௌட்டர் ஒன்றைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர்களது முயற்சிகள் அனைத்தும் இறுதியில் தோல்வியடைந்துள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில், பிரதான சந்தேகநபர்கள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, ஏழு டயர்களைப் பயன்படுத்தி சடலத்தை எரித்தும், எஞ்சிய தடயங்களை ஆற்றில் வீசியும் கொலைக்கான ஆதாரங்களை அழிக்க முயன்ற கும்பலின் நடவடிக்கைகள் இறுதியில் தோல்வியடைந்துள்ளன.

குற்றவாளிகள் மறைக்க முயன்ற உண்மையை, உயிரிழந்த இளைஞரின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த ஒரு சிறிய தாயத்தும், மோட்டார் சைக்கிளின் சுவிட்ச் சாவியும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.

வெளிநாட்டு பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றம் வந்த கோட்டாபய : தீர்ப்பு தொடர்பில் வெளியான உத்தரவு

வெளிநாட்டு பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றம் வந்த கோட்டாபய : தீர்ப்பு தொடர்பில் வெளியான உத்தரவு

வங்கிக் கணக்கு திறக்க இனி TIN தேவையில்லையா.. வெளியான புதிய அறிவிப்பு

வங்கிக் கணக்கு திறக்க இனி TIN தேவையில்லையா.. வெளியான புதிய அறிவிப்பு

YOU MAY LIKE THIS 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US