நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற கொலை! நாடாளுமன்றில் நாமல் கேள்வி
யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்லமுடியும் என அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறிய சிறிது நேரத்தில் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு விவகாரமானது தற்போதைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலான போக்கை எடுத்துக்காட்டுவதாாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இரண்டு கொலைகள்
இன்று இரண்டு கொலைகள் நாட்டில் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பாக நீதிமன்றுக்குள் ஒரு கொலை இடம்பெற்றுள்ளது.
அவர் பாதாள உலக உறுப்பினராக இருக்கலாம். அவருடைய செயற்பாடு தொடர்பில் நான் கதைக்க விரும்பவில்லை.
இங்கு பட்டப்பகலில் ஒரு கொலை இடம்பெற்றுள்ளது.
பாதாள உலக கும்பலை கட்டப்படுத்த உங்கள் அரசிடம் திட்டமிருந்தால் அது பற்றி எங்களுக்கு எவ்வித தேவைப்பாடும் இல்லை. அதைபற்றி நாங்கள் கேள்வி எழுப்பபோவதும் இல்லை.
ஆனால் இதுதான் இலங்கையை பற்றி உலகுக்கு உங்கள் அரசாங்கம் காட்டும் முகம் என்றால் அது ஏற்றுக்கொள்ளமுடியாது.
மன்னாரிவ் நீதிமன்றுக்கு வெளியில் துப்பாக்கிச்சூடு இடம்பெறுகிறது. கொழும்பில் நீதிமன்றுக்கு உள்ளே இடம்பெறுகிறது.
இப்படியான விடயங்களுக்கு சிறிதளவேனும் கவனத்தை செலுத்துங்கள்” என்றார்.
