கொலை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் - மூன்றாண்டுகளின் பின் சிக்கிய நபர்
இலங்கையில் கொலை செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளர்.
கேகாலையில் நபர் ஒருவரை கொலை செய்த நிலையில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக, அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி கலபிட்டமட பகுதியில் 70 வயதான நபர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
பொலிஸார் விசாரணை
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பியோடிய நிலையில், அவரை கைது செய்யும் வகையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது கொலை செய்யப்பட்டவரின் அயல் வீட்டில் வசிப்பரே சந்தேக நபர் என பொலிஸார் கண்டுபிடித்தனர்.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில், மீண்டும் நாடு திருப்பிய நிலையில் தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் அரைகுறை கவர்ச்சி உடையில் வலம்வந்த சீரியல் நடிகை தர்ஷனா... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan