தீவிரமடையும் போர்களம்!ரஷ்யா எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
போர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் விதமாக, உக்ரைனில் சண்டையில் ஈடுபட்டு வரும் ரஷ்ய படை வீரர்களுக்கான வெடிமருந்துகளை வழங்க பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergey Shoygu) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகளுக்கு மிகவும் தேவையான வெடி மருந்துகளின் அளவு தீர்மானிக்கப்பட்டது என்றும், அவற்றை அதிகரிக்க மாஸ்கோ நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரியவந்துள்ளது.
போர் முனையில் உள்ள வீரர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் விமர்சித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்வாங்கிய ரஷ்ய படை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய படைகளின் தாக்குதல் சற்று பின்வாங்கி இருந்தது. இந்நிலையில் உக்ரைனின் கிழக்கு எல்லை நகரங்களில் ஒன்றான பக்முத்தை ரஷ்ய படைகள் கைப்பற்ற முன்னேறி வருகின்றனர்.
பக்முத் நகரம் உக்ரைனிய படைகளுக்கு மூலோபாய அளவிற்கு முக்கியமானதாக இல்லை என்று இராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும், ரஷ்ய படைகளிடம் பக்முத் நகரை இழப்பது என்பது புடினுடன் சமரசம் செய்து கொள்வதற்கு சமம் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.