நகரசபைக்கு சொந்தமான வாகனம் தீப்பிடிப்பு! - பொலிஸார்விசாரணை (Video)
வவுனியா நகரசபைக்கு சொந்தமான குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டி இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த உழவு இயந்திரத்தின் பெட்டியில் நேற்றைய தினம் (23) இரவு நகரின் கழிவுகள் அகற்றப்பட்டு கழிவுகளுடன் நகரசபையின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (24) காலை பணிக்கு சென்ற ஊழியர் ஒருவர் குறித்த குப்பை அகற்றும் வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளமையை அவதானித்துள்ளார்.
பின்னர் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்தில் வாகனத்தில் இருந்த கழிவுகள் எரிந்துள்ளதுடன் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



