மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகர காவல் அணியை உருவாக்க முடியும் - தி.சரவணபவன்
யாழ்.மாநகர சபையின் முதல்வர் கைதானது அரசாங்கத்தின் எதேச்சதிகார செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர முதல்வர் கைதானது தமிழ் மக்களுக்கு ஆபத்தான சூழ்நிலையொன்று உருவாகிக்கொண்டிருப்பதை காட்டுவதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகரசபை கட்டளைச்சட்டத்தின் கீழ் மாநகர காவல் அணியை உருவாக்க முடியும் எனவும்,மட்டக்களப்பு மாநகரசபையில் 2018ஆம் ஆண்டு இவ்வாறான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு பொலிஸ் திணைக்களம் ஊடாக பத்து பேர் கொண்ட காவல் அணியொன்று கோரப்பட்டிருந்ததாகவும், அது தொடர்பான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீருடையானது பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
