மும்பை தாக்குதல் குற்றவாளியின் மனுவை நிராகரித்த அமெரிக்கா
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று மும்பை தாக்குதல் குற்றவாளியாக இந்தியாவினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள, தஹவ்வூர் ராணா, அமெரிக்கா நீதிமன்றத்தில் தக்கல் செய்த கடைசி மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால், தஹவ்வூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
மும்பை தாக்குதல்
இந்தியாவின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது.
நவம்பர் மாதம் 26ஆம் திகதி லஸ்கர் இ தொய்பா அமைப்பால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் மும்பையில் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் சுமார் 166 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் மும்பையில் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டினர் வசிக்கும் நாரிமன் இல்லத்திலும், லெபர்ட் கஃபோவிலும் தாக்குதல் நடத்தினார்கள் இதில். 25 பேர் வரை பலியானார்கள். இஸ்ரேலை சேர்ந்த 4 பேர் இதில் அடங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாடு கடத்தல்
இந்த நிலையில், மும்பை தாக்குதலில் தஹவ்வூர் ராணாவின் பங்கு முக்கியமானது என்பது கண்டறியப்பட்டது
இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் நுழைய திட்டம் வகுத்து கொடுத்த இவர், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர். தஹவ்வூர் ஹுசைன் ராணா அமெரிக்காவில் கடந்த 2009இல் பிடிபட்டார்.
பின்னர் இடம்பெற்ற விசாரணையில், மும்பை தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து, அவர் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனையடுத்து ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.
எனினும் தற்போது லொஸ் ஏஞ்சல்சில் உள்ள மெட்ரோ பொலிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணா, தன்னை நாடு கடுத்தப்படமால் இருக்க அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மனுக்கள் நிராகரிப்பு
அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடைசி வாய்ப்பாக இருந்த உயர் நீதிமன்றமும் ராணாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது இதனால், ராணா நாடு கடத்தப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கான வழிமுறைகள் சாத்தியமாகியுள்ளன குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே உள்ளது. இந்த ஒப்பந்த அடிப்படையில் ராணா நாடு கடத்தப்படுவார் எனத்தெரிகிறது.
இதன்படி, ராணா விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
