இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை பணம்! வெளியான தகவல்
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 7,197.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணவணுப்பல் அதிகரிப்பு
இதேவேளை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெற்ற வருமானம் 5,961.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டை விட 20.7% அதிகரிப்பாகும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அத்துடன் 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில் வெளிநாட்டு பணவணுப்பல் மூலம் 6.52 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளாதவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.