அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக பல கோடி ரூபா மோசடி
சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (13) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப்பிரிவு 03 இன் பிரதம பொலிஸ் பரிசோதகர் நளினி திஸாநாயக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இந்த விடயத்தை அறிக்கை செய்துள்ளார்.
இலட்சக்கணக்கில் பணம் மோசடி
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மக்களிடம் இருந்து பல கோடி ரூபா மோசடி செய்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
கண்டி, பின்னதுவ ஹேவே, அம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் அனுர என்ற (பிரியந்த) நபரே இந்த மோசடிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri
