கொழும்பில் மோட்டார் சைக்கிள்களில் இரவில் சாகசம் காட்டும் இளைஞர்களுக்கு நேர்ந்த கதி
கொழும்பு பிரதான வீதியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குழுவினருக்கு நீதிமன்றம் 427,500 ரூபா அபராதம் விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் சாரதி அனுமதிப்பத்திரங்களை 6 மாதங்களுக்கு இடைநிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி கல்லுப்பாறை மற்றும் டூப்ளிகேஷன் வீதி பகுதிகளில் பொழுதுபோக்கிற்காக அஜாக்கிரதையாகவும், அபாயகரமாகவும் இளைஞர்கள் குழு மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கை
ஒரு திசையில் மாத்திரம் வாகனங்கள் செல்லும் குறித்த வீதியில் ஒழுக்கமற்ற முறையில் அதிவேகமாகவும், எதிர்திசையிலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் செல்வதாக மக்களிடமிருந்து பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன் சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குழுவினரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு மத்தியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதாகவும் சைக்கிளின் பின் சக்கரத்தை மாத்திரம் செலுத்தி சாகசம் காட்டி ஏனைய சாரதிகளுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
