இந்தியாவிலிருந்து பலகோடி மதிப்புடைய போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயற்சி
இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த ஜஸ் போதைப்பொருளுடன் பாகிஸ்தானிய நபரொருவர் இந்தியா - கேரளா கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையானது கடந்த (15.05.2023) திகதியன்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய பிரஜையிடமிருந்து சுமார் 2500 கிலோகிராம் ஜஸ் போதைப்பொருள் மீட்க்கப்பட்டதுடன் இதன் சந்தைப்பெறுமதி 12ஆயிரம் கோடி இந்திய ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை பெறல்
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றக்காவலில் வைக்க இந்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்யவதற்கான நீதிமன்ற உத்தரவினை பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுவே இந்தியாவில் முதல் தடவையாக கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஐஸ் போதைப்பொருள் என கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |