முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம்
முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய வைகாசி பொங்கல் உற்சவமானது நேற்று (19.05.2024) இரவு சிறப்பாக நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட குறித்த ஆலயத்திலே வற்றப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தின் உடைய வருடாந்த உற்சவத்தின் ஆரம்ப உற்சவங்கள் இடம் பெறுவது தொன்று தொட்டு வழமையாக காணப்படுகிறது.
பாக்குத்தெண்டல் உற்சவம்
அந்த வகையிலே கடந்த 06.05 2024 அன்று பாக்குத்தெண்டல் உற்சவம் இடம்பெற்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் உடய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து கடந்த 13 .05 .2024 அன்று முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் கடந்த பல நாட்களாக உப்பு நீரில் விளக்கு எரிகின்ற அதிசயம் காட்டு விநாயகர் ஆலயத்தில் இருக்கின்ற அம்மன் சன்னிதானத்தில் இடம்பெற்று இருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்று(19) முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெற்று இன்றைய தினம் (20) அதிகாலை உற்சவம் நிறைவடைந்து அங்கிருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
சிறப்பாக இடம்பெற்ற இப்பொங்கல் உற்சவத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் தூக்குக் காவடி,காவடி, பால் செம்பு, கற்பூரச்சட்டி என நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டனர்.
செய்தி-சண்முகம் தவசீலன்