முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் ஆளுமை வெளிப்பாடுகளில் மாணவிகளின் முனைப்பு
முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியின் கற்றல் ஆளுமை வெளிப்பாடுகளில் மாணவிகளின் முனைப்பு அதிகமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை முடிவுகளினை அடிப்படையாகக் கொண்டு உயிரியல் மற்றும் கணித பொறியியல், வணிகம் மற்றும் கலைப்பாடங்களை அடிப்படையாக கொண்டு இந்த உற்று நோக்கல் மேற்கொள்ளப்பட்டது.
பாடசாலையினால் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பாடப்பிரிவுகள் அடிப்படையாக கொண்டு ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தகவல்கள் பெறப்பட்டன.
ஒரு பிராந்தியத்தின் மாணவர்களை உள்ளீர்த்து அவர்களுக்கான கற்றலை மேற்கொண்டு வரும் பாடசாலையாக மு/வித்தியானந்த கல்லூரி இருக்கின்றது.
[RHWASBZ ]
உயிரியல் பாட முடிவுகள்
உயிரியல் பாடத்தில் மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று நிலைகளையும் மு/ வித்தியானந்த கல்லூரி பெற்றுக் கொண்டுள்ளது.
அண்மையில் வெளியாகியிருந்த 2024 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளது.
உயிரியல் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்று மாணவர்களாக 16 மாணவர்களை பாடசாலை பட்டியலிட்டுள்ளது.
முதல் மூன்று இடங்கள்
மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளதோடு வைத்தியத்துறைக்கு ஐந்து மாணவர்களை அனுப்பக் கூடிய வாய்ப்புக்களையும் பெற்றுள்ளது.
நர்திகா,மதுவிழி, அச்சயா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர்.
விக்னேஸ்வரன் நர்திகா 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் முதல் நிலையை பெற்றுள்ளார்.
சிவபாதம் மதுவிழி 3A பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் இரண்டாம் நிலையை பெற்றுள்ளார்.
கிருபாகரன் அச்சயா 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் மூன்றாம் நிலையை பெற்றுள்ளார்.
ஜெகதீஸ்வரன் சயிந்தன் 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் ஐந்தாம் நிலையினையும் தெட்சிணாமூர்த்தி யதுர்சிகன் 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் ஆறாம் நிலையினையும் கந்தசாமி சயீபன் 2AB பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தின் ஒன்பதாம் நிலையினையும் பெற்றுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பழமை மிக்கதும் தேசிய பாடசாலையாக உள்ளதுமான வித்தியானந்த கல்லூரி உயிரியல் மற்றும் கணித பாடத்துறைகளில் தொடர்ச்சியான சாதனைகளை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
மாணவிகளின் ஆளுமை
இந்த தகவலின் அடிப்படையில் பாடசாலை மட்டத்தில் மாணவ மாணவிகளிடையே கற்றல் ஆளுமை வெளிப்பாட்டினை உற்று நோக்கலாம்.
இம்முறை உயிரியல் பாடத்தில் முதல் மூன்று நிலைகளையும் மாணவிகளே பெற்றுள்ளனர். அடுத்த மூன்று நிலைகளை மாணவர்கள் பெற்றுள்ளனர்.
ஆயினும் பாடசாலையினால் உயிரியல் பாடத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக பட்டியல்படுத்தப்பட்டுள்ள 16 மாணவ மாணவிகளில் ஐந்து மாணவர்கள் உள்ளடங்க ஏனையவர்கள் அணைவரும் மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மு/வித்தியானந்த கல்லூரியின் உயிரியல் பாடத்தில் அதிக திறமை வெளிப்பாடுகளை மாணவிகளே இம்முறை வெளிக்காட்டியுள்ளனர்.
கணிதப் பாடப் பிரிவில் பாடசாலையின் சிறந்த பெறுபேறுகள் பட்டியலில் உள்ள ஏழு மாணவர்கள் உள்ளனர்.ஆனபோதும் மாணவிகள் எவரும் இல்லை.
அவ்வாறே உயிர் தொகுதி தொழில்நுட்ப பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பேரில் இருவர் ஆண்களும் மற்றும் இருவர் பெண்களுமாக இருக்கின்றனர்.
அது போல் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூவரில் இருவர் ஆண்களாகவும் மற்றொருவர் பெண்ணாகவும் உள்ளனர்.
இந்த மாற்றங்களை உற்று நோக்கும் போது உயிரியல் சார்ந்த துறைகளில் முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் மாணவிகளின் முனைப்பும் ஆளுமை வெளிப்பாடும் அதிகமாகவே இருக்கின்றது.
கலைப்பாடம் மற்றும் வணிகம் பாடம்
வணிகப் பாடத்தில் இரு மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலைத்துறைப் பாடத்தில் ஒன்பது பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் தவின ஏனையவர்கள் மாணவிகள் ஆகும்.
இந்த அடிப்படையில் மாணவ மாணவிகளிடையே பாடசாலையின் கற்றல் வெளிப்பாடுகளில் அதிக ஆளுமை வெளிப்பாடுகளை மாணவிகளே வெளிக்காட்டியுள்ளனர் என்பதில் ஐயமில்லை.

