மன்னாரில் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள்
தமிழினப் படுகொலையின் (மே-18) 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் நினைவு கூரப்பட்டு வரும் நிலையில் மன்னாரிலும் நினைவு கூரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் இன்றைய தினம் (18) நினைவு கூரப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் பஜார் பகுதியில் இன்று (18) காலை 9 மணியளவில் குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி பகிரப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ், மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளடங்கலாக சமூக செயற்பாட்டாளர்கள் ,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்
மன்னாரில் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18) காலை 11 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.ரி.மோகன்ராஜ் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி.டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபையின் அருட்சகோதரிகள் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் முதல் நிகழ்வாக இறுதி யுத்தத்தில் இறந்து போன மக்களை நினைத்து பங்குத்தந்தை பங்கு மக்கள் முன்னிலையில் சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து மக்கள் ஆலயத்தை நோக்கி பேரணியாக சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு பாதையின் முன்னிலையில் மரியாதை செலுத்தி மலர் கொத்துக்களை அங்கு வைத்த பினர் மெழுகுவர்த்திகளை ஏற்றி இறந்து போன தம் உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
