முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு யாரும் தடை விதிக்க இயலாது! பாதிக்கப்பட்ட தாயொருவரின் கருத்து
2009ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் (Mullivaikkal) தமிழினப்படுகொலையில் கொன்றொழிக்கப்பட்டவர்களுக்கான நினைவுகூரலுக்கு யாராலும் தடை விதிக்க இயலாது என பாதிக்கப்பட்ட தாயொருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
"15 வருடங்களாக நாங்கள் இழந்தவர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி கொண்டு தான் இருக்கின்றோம்.
இருப்பினும், பசி, பட்டினியில் கிடந்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்ததற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, இறுதியில் நாங்கள் சர்வதேசத்திடமும் மண்டியிட்டுள்ளோம். இந்நிலையில், இறந்தவர்களுக்காக எங்களால் மேற்கொள்ளப்படும் நினைவேந்தல் நிகழ்வுளுக்கு யாராலும் தடை விதிக்க இயலாது” என கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |