தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுக்க வேண்டும்! சிவாஜிலிங்கம்
தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி-இந்த விடயத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் படுகொலை
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை தீவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று சொல்லக்கூடிய 1948 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் மீதான தமிழின படுகொலை ஆரம்பமாகிவிட்டது. 1970 களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 1983 இல் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தது மட்டுமல்ல, உயிருடனும் பலர் எரிக்கப்பட்டார்கள்.
பல கோடி சொத்துக்கள் தென்னிலங்கை அதாவது கொழும்பிலே அழிக்கப்பட்டது. தமிழ் பெண்கள் எம் தாய்மார்கள், சகோதரிகள் நூற்றுக்கணக்கில் மானவாங்கப்படுத்தப்பட்டார்கள்.
இவ்வாறு செய்ததன் பின்னரே எல்லா தமிழ் இயக்கங்களிலும் நூற்றுக்கு குறைவானவர்கள் இருந்து 1969இல் ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதனை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் ஆயுதபோராட்டத்தில் இணைந்து அது தீவிரபடுத்தப்பட்டு இறுதியாக முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்திலே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் மிகக் கொடூரமாக பல நாடுகளின் உதவியோடு போரை முடிவுக்கு கொண்டுவந்து செய்த மனிதப்படுகாெலை . இது ஒரு சர்வதேச போர்க்குற்றம், தமிழின படுகொலைக்குற்றம், குற்றவாளிகள் சர்வதேச குற்ற நீதிமன்றத்திலே நிறுத்தப்பட வேண்டும்.
சுதந்திர தமிழீழம்
அது மாத்திரமல்ல, அரசியல் தீர்வாக எங்களுடைய புலம்பெயர் தேசங்களில் இருப்பவர்களும் வாக்களிக்க கூடிய வகையில் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றை சர்வதேச சமூகம் நடாத்தவேண்டும்.
அப்பொழுதுதான் எங்களுடைய மக்களுக்கு என்ன தேவை என்பதை மக்கள் தீர்மானிக்க முடியும். சுதந்திர தமிழீழமா? அல்லது நீ போடும் பிச்சையா? என்பதை மக்கள் தீர்மானித்தால் அதை நாம் தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றோம்.
அந்தவகையில் இந்த தமிழின படுகொலை வாரத்தை, நினைவுநாளை ஒவ்வொரு தமிழனும் தமிழச்சியும் , உலகெங்கும் அனுஷ்டிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல வேறு அவ்அவ் இடங்களிலும் அனுஷ்டிக்க வேண்டும்.
தமிழர்கள் தம்மைதாமே ஆழக்கூடிய தீர்வினை எடுப்பதுதான் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி இந்த விடயத்தை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
