இயக்கம் இருந்திருந்தால்..!! ஒரு தாயின் கதறல்
இயக்கம் இருந்திருந்தால் இப்படியான துயரங்கள் நேர்ந்திருக்காது என்று தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தம் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டது.
இந்தநிலையில், 15ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் தமிழர் தாயக பகுதியெங்கும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மண்ணில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளின் போது பல தாய்மார்கள் தங்களது வேதனையை வாய்விட்டு கதறி கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர்.
இதன்போது, தான் தன்னுடைய பிள்ளைகள் யாரும் இன்றி தனி மரமாய் நிற்பதாகவும், இயக்கம் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நேர்ந்திருக்குமா என்று கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பலரையும் வேதனைக்குட்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
