தமிழின அழிப்பை நினைவுகூர உணர்வுபூர்வமாக தயாராகும் தாயகம் : முல்லைத்தீவு நகரை நோட்டமிட்ட உலங்கு வானூர்தி
மே மாதம் ஆரம்பித்த வேளை முல்லைத்தீவு(Mullaitivu) நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் தமிழின அழிப்பு நாளான மே மாதம் 18 ஆம் திகதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்களை மக்கள் நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
பொலிஸாரின் கெடுபிடிகள்
ஒவ்வொரு வருடமும் இராணுவம், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமானதாகும்.
இந்நிலையில், இவ்வருடமும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் தற்போது ஆரம்பமாகியிருக்கும் நிலையில் முல்லைத்தீவு பகுதியில் என்றும் இல்லாதவாறு கடந்த இரு தினங்களாக உலங்கு வானூர்தி வானை சுற்றி நோட்டமிட்ட வண்ணம் உள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
ஆகவே இவ்வருடமும் அஞ்சலி நிகழ்வு கெடுபிடிகளுக்குள் தானா? என்ற ஐயமும் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
ஏற்கனவே, தமிழர் தாயக பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில், அதற்கும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
