இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Batticaloa Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples Sri Lanka Final War
By Kumar May 13, 2025 01:18 PM GMT
Report

இலங்கை அரசின் கொடூரமும், கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச் செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாட்டினையும் எமது எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக இன அழிப்பு வாரத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உப்பில்லா கஞ்சிகாய்ச்சும் நிகழ்வு நடைபெற்றதுடன், இறுதி யுத்ததின்போது அழிப்பு செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் தமது உறவுகளை தேடி உயிர்நீர்த்த தாய்மார்களுக்காக அஞ்சலி செலுத்தியதைத்  தொடர்ந்து கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி,

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் கஞ்சி கூட கிடைக்காமல் எத்தனையோ அப்பாவி சிறுவர்கள் பொதுமக்கள் வயோதிபர்கள் தாய்மார்கள் என்று கையில் இருந்த கொஞ்சம் பிடி அரிசிகளை சேகரித்து சிறிய அளவு உப்பை சேர்த்து கிடைத்த நீரை ஊற்றி கஞ்சி தயாரித்து குடிப்பதற்கு பாத்திரங்கள் இன்றி சிரட்டைகளில் தான் அந்த கஞ்சியினை வேண்டி அதுவும் வரிசையில் நின்று வேண்டுவதற்கு பாடுபட்டு கஞ்சியினை அருந்தி உயிர் தப்பியவர்களும் உண்டு அது கிடைக்காமல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களும் சிறுவர்களும் இருக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு கடைசி யுத்தத்தில் இந்த இலங்கை அரசாங்கம் செய்த அநியாயம் கொடூரமான செல் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் இதன் போது எமது மக்கள் சிதறிக் கொண்டிருந்த வேளையில் இந்த கஞ்சிக்கு கூட இல்லாமல் நிறைய கஷ்டங்களை அனுபவித்து உயிர் இழந்த மக்களை நினைவு கூறும் முகமாக இன்று வடக்கு கிழக்கு அனைத்து பகுதிகளிலும் அனைவரும் இன அழிப்பு வார கஞ்சியினை வழங்கி வருகின்றார்கள்.

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இதனை முன்னெடுத்து வருகின்றோம். அடுத்த சந்ததியினருக்கு இவற்றை கொண்டு செல்லும் முகமாக துண்டு பிரசுரங்களும் வழங்கி இந்த மக்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைவு கூறும் முகமாக கஞ்சியினை மக்களுக்கு வழங்கிய நினைவு கூர்ந்து வருகின்றோம்.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து இந்த கஞ்சியினை பருகுகின்றார்கள் இதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வார்கள் இளம் சமூகங்கள் இதனைப் பற்றி மறந்தவர்களாகவும் அல்லது அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் அதற்கு எமது இனம் இதனை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கட்சியினை பரிமாறுகின்றோம்.

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

சர்வதேசத்திற்கும் இதனை எடுத்துக்காட்டி இத்தனை வருடமும் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிர்வித பதிலும் கிடைக்கவில்லை ஆகவே சர்வதேசமும் இனியும் பாராமுகமாக இருக்காது எங்களுக்கு நடைபெற்ற இந்த அநியாயத்துக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்  என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji


மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US