வல்லாதிக்க அரசுகளின் ஆதரவுடன் இடம்பெற்ற அதியுச்ச இனப்பேரழிப்பு! சுவிட்சர்லாந்து தமிழர்களின் ஆதங்கம்(Photos)
“வலிகளிலிருந்து வலிமை பெறுவோம்.உறுதி கொள்வோம். உரிமை மீட்போம்” என்ற தொனிப்பொருளில் சுவிட்சர்லாந்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைமையில் இந்த நினைவுத்தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரேற்றப்பட்டு, சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனை தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பெற்றது.
சமகால அரசியல் நிலவரங்கள்

தொடர்ந்து பொதுக்குறியீட்டு வணக்கப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்டு வணக்கப்பாடலும் பாடப்பட்டுள்ளன.

இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் இன அழிப்பு சார்ந்த துண்டுப்பிரசுரங்களும் இளையோர்களால் விநியோகிக்கப்பட்டதுடன், ஜேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மொழிகளிலான பேச்சுக்களும் வழங்கப்பட்டதுடன் காலத்தின் தேவைகருதியதும் சமகால அரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதுமான பேச்சுக்களும் தமிழ்மொழியிலும் இடம்பெற்றுள்ளன.



அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan