தமிழின படுகொலைக்கு நீதி கோரி வாகன ஊர்தி பவனி (Photos)
தாயக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாகனம் நான்காம் நாளான இன்று(15.05.2023) கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது.
முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்தி பயணம் வவுனியா, மன்னார், மல்லாவி ஊடாக பயணித்து மூன்றாம் நாளான நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு சந்தியில் நிறைவடைந்தது.
குறித்த ஊர்தியின் நான்காம் நாள் பயணம் இன்று காலை இரணைமடு சந்தியிலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி சேவைச்சந்தையில் அஞ்சலிக்காக தரிக்கப்பட்டது. தொடர்ந்து கிளிநொச்சி நகர் ஊடாக பயணித்து பூநகரி ஊடாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் என அந்த குழுவின் தலைவர் த.ஈசன் ஊடகங்களிற்கு தெரிவித்தார்.
கிளிநொச்சி சேவைச்சந்தையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் கரைச்சி பிரதேச
சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் இனப்படுகொலை தொடர்பில் உரையாற்றினார்.
செய்தி-எரிமலை
வவுனியா
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி ஏற்பாட்டில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரிய வாகன ஊர்திப் பவனி இன்று (15.05.2023) மதியம் வவுனியா மாவட்டத்தினை வந்தடைந்தது.
கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ் வாகன ஊர்தியானது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் சில மாவட்டங்களுக்கு மக்கள் அஞ்சலிக்காக சென்று மே 18ம் திகதி முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி மலர்கள் தூபிய பின்னர் மாவட்டத்தின் கிராம பகுதிகளுக்கு பவனி சென்றது.
இதன்போது, இனப்படுகொலைக்கு நீதி வேண்டியும், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டியும் இவ் ஊர்தி பவனி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி: திலீபன்
முதலாம் இணைப்பு
அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதி கோரி, படுகொலையினை சித்தரிக்கும் படுகொலை உருவப்படங்கள் தாங்கிய வாகன ஊர்திப் பவனி நான்காவது நாளாக இன்று (15.05.2023) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வாகன ஊர்திப் பவனி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஊர்திப் பவனி
ஐயங்கன்குளம் பகுதியில் இராணுவத்தினரின் கிழைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் கல்லறைகளில் அஞ்சலி செலுத்தப்பட்டு வாகன ஊர்திப் பவனி ஆரம்பிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |