இறுதி யுத்தத்தில் உயிரின் பாதியை இழந்து விட்டேன்! பிரித்தானியாவில் முகிலினி (Video)
எமது தாயகத்தின் இருப்பையும் எமது மக்களின் அரசியல் உரிமைகளையும் உறுதிபடுத்தி இலங்கையின் இன அழிப்பிலிருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட அனைவரையும் பாதுகாப்பது உலகின் கடமை என பிரித்தானிய நாடாளுமன்ற நிகழ்வு ஒன்றில் செல்வி முகிலினி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில், இலங்கை அரசின் இன அழிப்பின் நிகழ்ச்சி நிரலில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு பற்றி உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய முகிலினி,“பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை இல்லை என்று தமிழீழ தேசிய தலைவர் கூறியுள்ளார்.
சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், இதே நேரத்தில் உயிரில் பாதியை இழந்து அழுது ஆற்பரித்து அடங்க முடியாமல் தவித்து கொண்டிருந்த சிறுமி.
இன்று இந்த பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒரு பெண்ணாகி எமது மக்களின் உரிமையின் குரலாய் ஒலித்து கொண்டிருப்பதை நினைத்து பெருமைபடுவதா? இல்லை இத்தனை காலமாக செயலாற்ற முடியாதவர்களாக நாங்கள் இருப்பதை எண்ணி தலை குனிவதா?”என தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தின் நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய செல்வி முகிலினியின் முழுமையான தகவலை காணொளியில் காணலாம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri