தமிழர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு (Video)
முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து
செல்லுகின்ற செயற்றிட்டம் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர்
அணியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நெல்லியடி பேருந்து நிலைய பகுதியில் இன்று (13.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலமையில் இளைஞர் அணியினர் பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
செய்தி:தீலிபன்
கிளிநொச்சி
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்ட்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி நேற்று வழங்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில் அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின், தொழில்நுட்ப பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி : கஜிந்தன்
யாழ்ப்பாணம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் - முலவைச் சந்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்து இன்று (13.05.2023) வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் வட்டார அமைப்பாளர் இரத்தினம் சதீஸ் தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.
இதில் பங்கெடுத்த பலரும் உணர்வுபூர்வமாக, முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்தியுள்ளனர்.
இதேவேளை யாழ் பல்பகலைக்கழகம் மற்றும் யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் அலுவலகத்திற்கு முன்னால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
செய்தி : கஜிந்தன்
மட்டக்களப்பு
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் வடக்கு கிழக்கு மாகாணம் தழுவியரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் இன்று (13.05.2023 )மாணவர்களுடன் இணைந்து பேரெழுச்சியாக மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கபட்டதுடன் யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவ மாணவியரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பிற்கான அரிசியினை வீடுகளிற்கு சென்று திரட்டியுள்ளனர்.
இதன்போது முதலாவதாக வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் காலை எட்டு மணியளவிலும் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் காலை (11:30) மணியளவிலும் ,மட்டகககளப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் வளாகத்தின் முன்பாக குறித்த வளாக மாணவர்களுடன் இணைந்து மதியம் (1:00) மணியளவிலும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் மாலை 4 மணியளவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கஞ்சியின் வரலாறு அடங்கிய துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
செய்தி : கஜிந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
