மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல்களை மீறி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு

Sri Lanka Police Batticaloa Mullivaikal Remembrance Day
By Kumar May 14, 2024 08:32 AM GMT
Report

தமிழர் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாளான இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நடவடிக்கைகள் பொலிஸாரின் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தலையும் மீறி நடைபெற்றன.

இன்றையதினம் (14.05.2024) மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து மூன்றாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் விமான நிலைய வீதியில் உள்ள ஸ்ரீபரிபூர்ண விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,ஜேசுசவை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி, சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.லவகுமார்,தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி ஆர்.ஜெயபிரகாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல்களை மீறி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு | Mullivaikal Memorial Held Despite Police Threats

இதன்போது ஆலயத்திற்கு முன்பாக கஞ்சி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் பெருமளவு புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு வந்த மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸார் அங்கு கஞ்சி வழங்கும் செயற்பாடுகளை செய்யவேண்டாம் என்று அங்கிருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு செல்லுமாறும் பணித்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இந்த நிலையில் சுகாதார நடைமுறையினை பின்பற்றவும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகள் இன்று கஞ்சி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாது என மீண்டும் தடைகளை ஏற்படுத்துவதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் அங்கு பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரையும் அழைத்துவந்து நிகழ்வினை தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல்களை மீறி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு | Mullivaikal Memorial Held Despite Police Threats

இந்த நிலையில் அங்குவந்த பொதுச்சுகாதார பரிசோதகர் சுகாதார நடைமுறைகளைப்பேணி செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு தெரிவித்ததை தொடர்ந்து சுகாதார நடைமுறைகளை பேணியவாறு கஞ்சி காய்ச்சும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பொலிஸாரின் செயற்பாடு

இதன்போது கஞ்சியை பரிமாறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது விமான நிலைய வீதியின் இரு மருங்கிலும் போக்குவரத்து பொலிஸார் நிறுத்தப்பட்டு வீதியில் செல்வோருக்கு கஞ்சியை பரிமாறும் செயற்பாடுகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கஞ்சியை பருக வாகனங்களை நிறுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையிலும் பெருமளவான மக்கள் கஞ்சியை வாங்கி பருகியுள்ளனர்.

மட்டக்களப்பில் பொலிஸாரின் அச்சுறுத்தல்களை மீறி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு | Mullivaikal Memorial Held Despite Police Threats

இதன்போது அப்பகுதியினால் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீதியின் கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய நிலையில் அவரையும் அச்சுறுத்தும் வகையில் போக்குவரத்து பொலிஸார் செயற்பட்ட நிலையில் அவருக்கும் போக்குவரத்து பொலிஸாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் அவரது வாகன அனுமதி பத்திரம் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டதுடன் மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு பொலிஸார் எச்சரிக்கை

அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு பொலிஸார் எச்சரிக்கை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
மரண அறிவித்தல்

அல்வாய், சுண்டிக்குளி

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், யாழ்ப்பணம், Victoria, BC, Canada

17 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Épinay-sur-Seine, France

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Markham, Canada

16 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், அளவெட்டி

13 Sep, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வத்திராயன் தெற்கு, மருதங்கேணி தெற்கு

14 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சுன்னாகம், இரத்தினபுரி, கொழும்பு, தெல்லிப்பழை, Vaughan, Canada

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US