முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
உலக அளவில், முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இன்று (மே 18) அனுஷ்டிக்கப்படுகின்றது.
16 வருடங்கள் கடந்த நிலையில் இன்றும் தமது உறவுகளின் இறப்புக்கு நீதி கேட்டு போராடும் அவலநிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.
போரில் தாய், தந்தையை இழந்த பிள்ளைகள், பிள்ளையை இழந்த பெற்றோர்கள் என ஒவ்வொருவரும் தமது உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் பூமியை கண்ணீரில் நனைத்தனர்.
இந்நிலையில் தமது மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலரின் போக்கு மக்கள் மத்தியில் பல விசனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தின் போது புதிய சிலை திறப்பிற்கான காரணம் என்ன? அதில் அரசாங்கத்தின் சூழ்ச்சி என்ன? என்பது தொடர்பில் பல விடயங்களை இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி ஆராய்கின்றது.
